2023 கிரிக்கெட் : சர்வதேச போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள்... டாப் லிஸ்ட்டில் 3 இந்தியர்கள்!


சுப்மன் கில்

இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1,000 ரன்களை கடந்துள்ள வீரர்கள் பட்டியலில் மூன்று இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

அதன்படி இந்த பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளவர்கள் விபரம்.

சுப்மன் கில்:

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் இந்த ஆண்டில் இதுவரை 25 போட்டிகளில் விளையாடி, 5 சதங்கள், 7 அரை சதங்களை விளாசியுள்ளார். 165 பவுண்டரிகள், 33 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 1426 ரன்களை குவித்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 208.

பாத்தும் நிஸ்ஸங்கா:

இலங்கை அணி வீரர் பாத்தும் நிஸ்ஸங்கா இந்த பட்டியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதன்படி, நடப்பாண்டில் இதுவரை 27 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1108 ரன்கள் குவித்துள்ளார். மொத்தம் 2 சதங்கள், 9 அரைசதங்கள் விளாசியுள்ள பாத்தும் நிஸ்ஸங்கா
148 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 104.

ரோஹித் சர்மா

ரோகித் சர்மா:

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 1060 ரன்களுடன் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இந்த ஆண்டில் இதுவரை 23 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள ரோகித் சர்மா, 2 சதங்களும் 8 அரைசதங்களும் அடித்துள்ளார். இதில் மொத்தம் 109 பவுண்டரிகள் மற்றும் 56 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 131 ரன்கள்.

விராட் கோலி:

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான விராட் கோலி இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். இதுவரை 23 சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் 1054 ரன்களைக் குவித்துள்ளார்.

இதில் 4 சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் அடங்கும். மேலும், 94 பவுண்டரிகள் 21 சிக்ஸர்கள் அடித்துள்ளார். விராட் கோலியின் அதிகபட்ச ஸ்கோர் 166 ரன்கள்.

விராட் கோலி

டேரில் மிட்செல்:

இந்த ஆண்டில் 4 கிரிக்கெட் வீரர்கள் 1,000 ரன்களைக் கடந்துள்ள நிலையில், ஐந்தாவதாக அந்த இடத்தை 998 ரன்களைக் குவித்து நெருங்குகிறார் நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல். இந்த ஆண்டில், 23 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள மிட்செல், 4 சதங்கள், 3 அரை சதங்கள், 75 பவுண்டரிகளும், 27 சிக்ஸர்களும் அடித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 130.

மேலும், இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் ஏழாவது இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் இருக்கின்றனர்.

எட்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் மார்க்கரம் மற்றும் ஒன்பதாவது இடத்தில் ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த வீரர் ஆசிப் கான், பத்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் குயின் டன் டி காக் ஆகியோர் இருக்கின்றனர். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்துள்ள 10 பேரில் மூன்று பேர் இந்திய வீரர்கள் என்பதும், அவர்கள் மூவருமே ஆயிரம் ரன்களைக் கடந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

திமுக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான 40 இடங்களில் ரெய்டு!

சிறையில் இனி கைதிகளைப் பார்க்க ஆதார் கட்டாயம்!

x