மீண்டும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்... அண்டர் 19 உலகக்கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தான் தோல்வி!


இந்தியா ஆஸ்திரேலியா

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் இன்றைய அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி 48.5 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அஸான் அவாய்ஷ் மற்றும் அராஃபாத் மின்ஹாஸ் தலா 52 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்டிரேக்கர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

ஆஸ்திரேலியா அணி

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடியது. இதில் ஆஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா மோதவுள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு நடந்த 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றது. இதற்கு 19 உட்பட்டோருக்கான இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x