2025-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம்: 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது


ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2025 முதல் 2027-ம் ஆண்டு வரையிலான சுழற்சியில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. இதன்படி இந்திய அணி 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இந்த தொடரானது தற்போதைய சுழற்சியில் இறுதிப் போட்டி முடிந்த சில நாட்களில் தொடங்குகிறது. இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூன் 20-ம்தேதி வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஹெட்டிங்லியில் தொடங்குகிறது.

2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 2 முதல் 6-ம் தேதி வரை பர்மிங்காமிலும், 3-வது டெஸ்ட் போட்டி ஜூலை 10 முதல் 14-ம் தேதி வரை லார்ட்ஸிலும், 4-வது டெஸ்ட் போட்டி ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை மான்செஸ்டரிலும், கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரை ஓவலிலும் நடைபெறுகிறது. முதல் போட்டிக்கும் 2-வது போட்டிக்கும் இடையில் ஒரு வார இடைவெளியும் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிக்கான இடைவெளியாக 8 நாட்களும் வழங்கப்பட்டுள்ளது

x