சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் சேலத்தில் நடைபெற்று வரும்இந்தியன் ரயில்வேஸ் அணிக்குஎதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் டின்சிஏ பிரெசிடெண்ட் அணிமுதல் நாள் ஆட்டத்தில் 85.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி 137.3 ஓவர்களில் 459 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக முகமதுஅலி 267 பந்துகளில், 20 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 182 ரன்கள் விளாசினார். ரயில்வே அணி தரப்பில் அயன் சவுத்ரி 5 விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய ரயில்வே அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 44 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இந்த தொடரில் 2-வது முறையாக சதம் விளாசிய பிரதம் சிங் 104 ரன்களும், முகமது சைஃப்43 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கோவையில் ஹரியானா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆட்டத்தில் டிஎன்சிஏ லெவன் அணி முதல் நாள் ஆட்டத்தில் 89.2 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 329 ரன்கள் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் 139 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ லெவன் அணி 115.2 ஓவர்களில் 393 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாபா இந்திரஜித் 258 பந்துகளில், 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 167 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஹரியானா அணி தரப்பில் நிஷாந்த் சிந்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.
இதையடுத்து பேட் செய்த ஹரியானா அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 62ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. மயங்க் ஷான்டிலியா 2, அங்கித் குமார் 13, ஹிமான்ஷு ராணா 23,நிஷாந்த் சிந்து 19, சர்வேஷ் ரோஹிலா 0, சுமித் குமார் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். தீருசிங் 61, ஜெயந்த் யாதவ் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிஎன்சிஏ லெவன் அணி தரப்பில் சாய் கிஷோர் 3, லக்சய் ஜெயின் 2 விக்கெட்கள் கைப்பற்றினர்