சோகம்…'அங்கிள் பெர்ஸி' திடீர் மரணம்... இலங்கை கிரிக்கெட் அணி அதிர்ச்சி!


பெர்ஸி அபேசேகர

இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான பெர்ஸி அபேசேகர காலமானார். அவருக்கு வயது 87.

உலக ரசிகர்களால் 'அங்கிள் பெர்ஸி' என்று அழைக்கப்படும் பெர்ஸி அபேசேகர 1979 உலகக்கோப்பை முதல் இலங்கை அணி விளையாடும் போட்டிகளுக்கு நேரில் சென்று ஆதரவு அளித்து வந்தார். ஆனால் 1996-ம் ஆண்டு தான் அவர் பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் அவர் காலமானார்.

பெர்ஸி அபேசேகர

இவரது மறைவுக்கு இலங்கையின் முக்கிய வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே போல் அவர் குறித்து நினைவுகள் சனத் ஜெயசூர்யா, குமார் சங்ககாரா உள்ளிட்ட வீரர்கள் பகிர்ந்துள்ளனர். தனது முதல் போட்டி முதல் கடைசி போட்டி வரை அனைத்திற்கும் நேரில் வந்து பெர்ஸி ஆதரவு அளித்தார் என்று குமார் சங்ககாரா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியினர் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கும் அங்கிள் பெர்ஸி பரிட்சயம். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்டின் ஒருமுறை தனது ஆட்ட நாயகன் விருதை பெர்ஸியிடம் கொடுத்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு விராட் கோலி டிரெசிங் ரூமிற்கு பெர்ஸியை அழைத்துச் சென்று கவுரவித்தார். அதே போல் ரோகித் ஷர்மா, பெர்ஸியை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை அணிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த தீவிர ரசிகர் பெர்ஸி அபேசேகர. தற்போது உலகக்கோப்பை போட்டியைக் காண இவர் வரவில்லை.

பெர்ஸியுட்ன் ரோஹித்

உடல் நலக்குறைவு காரணமாக வராமல் இலங்கையிலேயே இருந்த நிலையில், நேற்று உயிரிழந்தார். பெர்ஸியை சாதாரண ரசிகர் என்று சொல்லாமல் சூப்பர் ரசிகர் என்று அனைவரும் கூறுகின்றனர். இலங்கை வீரர்கள் மட்டும் இல்லாமல் மற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள் பெர்ஸிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

x