அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட்... முதல் அரையிறுதியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை!


இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதல்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் கலந்துகொண்ட இந்த தொடரின் லீக் மற்றும் சூப்பர் 6 போட்டிகள் நிறைவடைந்து, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. அதிலும் இந்திய அணி லீக், சூப்பர் 6 என இதுவரை விளையாடிய போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத அணியாக உள்ளது.

இந்திய அணி

இத்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று பெனோனி நகரில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்திய அணி பேட்டிங் - பந்துவீச்சு என இரண்டிலும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி வருகிறது. அதேசமயம், சொந்த மண்ணில் விளையாடுவது தென்னாப்பிரிக்க அணிக்குப் பலமாக அமையும். மேலும், 2014-ல் தென்னாப்பிரிக்கா அணிதான் கோப்பையைக் கைப்பற்றியது. ஐந்து முறை சாம்பியன் பெற்றம் வென்றிருக்கும் இந்தியாவும் - சொந்த மண்ணில் விளையாடும் தென்னாப்பிரிக்காவும் வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் என்பதால், இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x