இங்கிலாந்தின் பந்துவீச்சில் திணறிய இந்தியா... 229 ரன்களில் சுருண்டது!


உலகக் கோப்பை தொடரின் இன்றைய லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 229 ரன்கள் எடுத்துள்ளது.

லக்னோவில் நடைபெறும் 29வது உலகக் கோப்பை போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில் 9 ரன்களில் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி வில்லி பந்தில் டக் அவுட்டானார். அடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 4 ரன்களில் வோக்ஸ் பந்தில் அவுட்டானார். ஆனாலும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இணைந்து நிதானமாக ஆடினர்.

ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் ரோகித் சர்மா பொறுப்போடு ஆடினார், ஆனாலும் அவர் 87 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியை கொடுத்தார். தொடர்ந்து ஜடேஜா 8 ரன்களிலும், ஷமி 1 ரன்னிலும் அவுட்டானார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த சூர்யகுமார் யாதவ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பும்ரா 16 ரன்களிலும், குல்தீப் 9 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 229 ரன்களை எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் வில்லி 3 விக்கெட்டுகளையும், வோக்ஸ் மற்றும் ரஷீத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

x