ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் 100வது பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் தங்களது சிறப்பான திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஆடவர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் திலீப் மகாதேவ் கவித் 49.48 நொடிகளில் இலக்கை கடந்து தங்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் இந்தியாவிற்கு 100வது பதக்கம் கிடைத்துள்ளது.
26 தங்கம், 29 வெள்ளி, 45 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா இந்த வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஜகார்தாவில் நடைபெற்ற பாரா விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வீரர்கள் 72 பதக்கங்கள் வென்றிருந்தனர்.
இதுவே இதுவரை அதிகபட்ச பதக்க எண்ணிக்கையாக இருந்து வந்தது. தற்போது இந்த சாதனையை முறியடித்து இந்திய வீரர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்திய வீரர்களின் இந்த சாதனைக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வீரர்களின் திறமை, உழைப்பு, மற்றும் மன உறுதியின் விளைவாக இந்த வெற்றி சாத்தியமாகி இருப்பதாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
தடகளம், சதுரங்கம் மற்றும் படகு போட்டிகளில் இந்திய வீரர்களின் பதக்க வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அடுத்த அதிர்ச்சி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில், கல்வீச்சு!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்வு... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!