தர்மசாலாவில் நடந்த இந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டியின்போது, சிறுவன் ஒருவன் ''ஒரு நாள் இந்தியாவுக்காக விளையாடுவேன். இதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்'' என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்டரை காட்டியது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய லீக் போட்டி, ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடந்தது. இந்த போட்டியை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
போட்டியின்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த இர்யாகாஷ் அகர்வால் என்ற சிறுவன், '' ஒரு நாள் நானும் இந்தியாவிற்காக விளையாடுவேன். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்''. என்ற போஸ்டரை கொண்டு வந்து காட்டினார். இது அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பலரின் கவனத்தை ஈர்த்தது.
இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அனுராக் தாக்கூர் கூறியுள்ளதாவது: இர்யாகாஷ் அகர்வாலின் உறுதியையும், கனவுகளையும் பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது. போஸ்டரில் இருந்து மைதானம் வரை உங்களின் பயணத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன். கனவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உண்மையாவதை பார்க்க நாங்கள் காத்திருக்கிறோம் '' எனக்கூறியுள்ளார்.
இதனை பார்த்த சமூக வலைதளவாசிகள், அந்த இளம் ரசிகரின் மன உறுதி மற்றும் நம்பிக்கையை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?
நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!
பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!