நெதர்லாந்திற்கு எதிரான போட்டி - ஆஸ்திரேலியா அணி பேட்டிங்!


ஆஸ்திரேலியா - நெதர்லாந்து

நெதர்லாந்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் 24வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்குகிறது.

ஆஸ்திரேலியா இதுவரை விளையாடியுள்ள 4ல் இரண்டு தோல்வியும், இரண்டில் வெற்றியும் பெற்றுள்ளது. இந்த போட்டியில் வெல்வதன் மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்புக்காக அந்த அணிக்கு உள்ளது. ஆனால், தோல்வியடைந்தால் அரையிறுதிக்கு இனி வரும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

நெதர்லாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், அது அந்த அணி வீரர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும்.

x