வங்கதேசத்தை துவம்சம் செய்த டிகாக்.... 383 ரன்களைக் குவித்து இமாலய இலக்கை நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா!


குவின்டன் டிகாக்

வங்கதேசத்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் அந்த அணி வெற்றி பெற 383 ரன்னை இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையின் 23வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. தொடக்கத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் இழந்து அந்த அணி தடுமாறியது. ஆனால், தொடக்க ஆட்டக்காரர் குவின்டன் டிகாக், கேப்டன் ஏய்டன் மர்க்ரம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வங்கதேச பந்து வீச்சாளர்களை சிதறடித்தனர்.

ஒரு கட்டத்தில் மர்க்ரம் 60 ரன்னில் ஆட்டமிழக்க, டிகாக்குடன் ஜோடி சேர்ந்தார் கிளாசன். இருவரும் அணியின் ரன் ரேட்டை வெகுவாக உயர்த்தினர். டிகாக் 174 ரன்னுக்கும், கிளாசன் 90 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, அந்த அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 382 ரன் எடுத்தது. வங்கதேசம் சார்பில் ஹசன் முகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 383 என்ற கடினமான இலக்கை நோக்கி வங்கதேசம் அணி களமிறங்க உள்ளது.

x