பாரா ஆசிய விளையாட்டு! ஒரே நாளில் 3 பதக்கங்களை வென்ற இந்தியா!


இந்திய வீரர், வீராங்கனைகள்

பாரா ஆசிய விளையாட்டு படகு போட்டியில், இன்று ஒரே நாளில் இந்தியா 3வது பதக்கத்தை வென்றுள்ளது. இதுவரை 8 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 26 பதக்கங்கள் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது

தீப்தி ஜீவன் ஜி, அஜய்குமார்

சீனாவின் ஹாங்சு நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2வது நாளாக இன்றும் இந்தியா பதக்கத்தை குவித்து வருகிறது. T20-400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்றார். அதேபோல், 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் இந்திய வீரர் அஜய் குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பிராச்சி யாதவ்

படகு போட்டியில் இந்திய வீராங்கனை பிரச்சி யாதவ் தங்கப்பதக்கம் வென்றார். ஆண்களுக்கான படகுப் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் கவுரவ் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல், இந்திய வீரர் கஜேந்திர சிங் வெண்கலப் பதக்கம் வென்றார். படகுப்போட்டியில் மட்டும் இன்று ஒரே நாளில் இந்தியா 3வது பதக்கத்தை வென்றுள்ளது. கிளப் த்ரோ போட்டியில் இந்திய வீரர் ஏக்தா பையான் வெண்கலம் வென்றார். 10 மீ ஏர் பிஸ்டல் போட்டியில் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் வெண்கலம் வென்று அசத்தினார்.

x