உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது ஆட்டம் தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள நியூசிலாந்து அணியும், இந்திய அணியும் எதிர்கொள்கின்றன. இதுவரை இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத இரு அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்துவதால் ரசிகர்களிடையே பெரும் உற்சாகம் நிலவி வருகிறது.
இதையடுத்து டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் காலில் காயம் ஏற்பட்டு ஓய்வில் உள்ள ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் இணைந்துள்ளார். இதே போல் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது சமி அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் தரம்சாலா மைதானத்தில் மேகமூட்டமாக காணப்பட்ட போதும், பெரிதாக பாதிக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
20 ஆண்டுகளாக உலககோப்பை போட்டிகளில் நியூசிலாந்தை வெல்லாததற்கு பழி தீர்க்க இன்று இந்திய அணி முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உஷார்... தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!