400 ரன் என்ற இமாலய இலக்கு - எட்டிப்பிடிக்குமா இங்கிலாந்து?


இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா

நடப்பு சாம்பியன் இங்கிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 400 என்ற இமாலய இலக்கை தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்துள்ளது.

மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை 20வது லீக் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர் குவிண்டின் டிகாக் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்து வந்த வீரர்கள் ஒவ்வொருவரும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். அந்த அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 399 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கிளாசென் 109 ரன்னும், ஹென்ரிக்ஸ் 85 ரன்னும், மார்கோ ஜென்சன் 75 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து சாப்ரில் ரீஸ் டாப்லே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

400 ரன் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது. அந்த அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லை எனில் இனி வரும் போட்டியில் ஒன்றில் தோற்றால் கூட அரையிறுதி வாய்ப்பு கை நழுவி போகும் என்பது குறிப்பிடத்தக்கது.

x