விளையாட்டு வீரர்களுக்கு 33 பொருட்கள் அடங்கிய `கலைஞர் கிட்’... டெண்டர் கோரியது தமிழக அரசு


கிராமப்புறங்களில் உள்ள இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய ’கலைஞர் கிட்’ வழங்கப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.

அமைச்சர் உதயநிதி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்ட சபை கூட்டத் தொடரில் தனது துறை மானியக் கோரிக்கையின் போது பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு பொன்விழாவை சிறப்பிக்கும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் டாக்டர்.கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.42 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும் என கூறியிருந்தார்.

அந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் 33 விளையாட்டு பொருட்கள் அடங்கிய கலைஞர் விளையாட்டு கிட் விரைவில் வழங்க இப்போது டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

x