உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17வது லீக் போட்டி புனே நகரில் நடைபெற்று வருகிறது. இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தன்ஜித் ஹாசன், லிட்டன் தாஸ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, வந்த அந்த அணி வீரர்கள் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர்.
ஒரு கட்டத்தில் அந்த அணி 300 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்பில் லிட்டன் தாஸ் 66 ரன்னும், தன்ஜித் ஹாசன் 51 ரன்னும் எடுத்தனர். இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 257 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
உலகின் நெ.1 கார்ல்சனை வீழ்த்திய தமிழர்.. இளம் சாதனையாளருக்கு குவியும் பாராட்டு!