புரோ கபடி ஏலத்தில் சச்சினுக்கு ரூ.2.15 கோடி


சச்சின் தன்வார்

புரோ கபடி லீக் 11-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது. ஏலத்தின் தொடக்கத்தில் தமிழ் தலைவாஸ் அணி ரெய்டரான சச்சின் தன்வாரை ரூ.2.15 கோடிக்கு ஏலம் எடுத்தது. தெலுகு டைட்டன்ஸ் அணி ஆல்ரவுண்டரான பவன் ஷெராவத்தை ரூ.1.72 கோடிக்கு விலைக்கு வாங்கியது.

டிபன்டரான சுனில் குமாரை ரூ.1.05 கோடிக்கு யு மும்பா அணியும், ஈரான் நாட்டைச் சேர்ந்த முகமதுரேசா ஷட்லூயி சியானேவை ரூ.2.07 கோடிக்கு ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் ஏலம் எடுத்தன.

x