உலகக்கோப்பை கிரிக்கெட்- நியூசிலாந்து 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; ஆப்கானிஸ்தான் படுதோல்வி


ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து போட்டி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றும் வரும் 16வது லீக் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், கேப்டன் டாம் லேத்தம், கிளென் பிலிப்ஸ் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 288 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில் லேத்தம் 68 ரன்னும், பிலிப்ஸ் 71 ரன்னும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் நவீன் உல் ஹக், அஸ்மதுல்லா ஓமர்சை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

289 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணி நியூசிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

x