உலகக் கோப்பை கிரிக்கெட்- உத்வேகத்துடன் ஆப்கான் அணி; நியூசிலாந்து நிதான ஆட்டம்


நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் மோதல்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரின் 16வது லீக் சுற்று ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதிக எதிர்பார்ப்புக்கிடையே நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இதையடுத்து, நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கி விளையாட உள்ளது.

முந்தைய போட்டியில் நடப்பு சாம்பியனும், பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றுமான இங்கிலாந்தை வீழ்த்திய உத்வேகத்துடன் ஆப்கானிஸ்தான் அணியும், தொடர் வெற்றிகளால் நம்பிக்கையுடன் நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாம் லேத்தம் தலைமையில் அந்த அணி களமிறங்கி விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 43 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டிக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!

x