இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; முதல் இரு போட்டிகளிலிருந்து விலகினார் கோலி - காரணம் இதுதான்!


விராட் கோலி

சொந்த காரணங்களுக்காக இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து கோலி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி வரும் 25ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து அணி நேற்று ஹைதராபாத் வந்தடைந்தது. இந்நிலையில், இந்திய வீரர்கள் விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் இன்று அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டனர். இந்நிலையில், விராட் கோலி இங்கிலாந்திற்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ரோகித், பண்ட், விராட் கோலி

இதுகுறித்து, அவர் பிசிசிஐக்கு அளித்துள்ள தகவலில் சொந்த காரணங்களுக்காக முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மேலும், மீடியா மற்றும் ரசிகர்கள் கோலியின் தனிப்பட்ட காரணங்கள் குறித்து தேவையற்ற கருத்துக்களை பகிர வேண்டாம் என பிசிசிஐ கேட்டுக்கொண்டுள்ளது.

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில், ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில், விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆவேஷ் கான், ஸ்ரீகர் பரத், ஸ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், அக்ஸர் படேல், கேல்.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

2024 - 2025ம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியா பின் தங்கியுள்ளது. இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வென்று மீண்டும் புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x