விளையாட்டு வீரர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு... மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு!


ராஜ்நாத் சிங்

ஆசிய விளையாட்டுகள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

சமீபத்தில் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இதுவரை இல்லாத அளவாக 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் இந்தியா சாதனை படைத்தது. இதில் பதக்கம் வென்ற இந்திய ஆயுதப் படை வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று கலந்துரையாடினார்.

வில்வித்தையில் தங்கம் வென்றது இந்தியா

அப்போது பேசிய ராஜ்நாத் சிங் ''ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.25 லட்சம், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.15 லட்சம், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது'' என்றார்.

x