உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது போட்டியில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் லீக் சுற்றுப் போட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 13 வது போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொள்ள உள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் மட்டுமின்றி இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய 14 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது. அதேசமயம் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களில் இடம்பெற இங்கிலாந்து அணி முனைப்பில் உள்ளது. எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!