ஓவராக பேசிய ஷாகின் அப்ரிடி - தக்க பதிலடி கொடுத்த இந்திய வீரர்கள்!


ஷாகின் அப்ரிடி

இந்தியாவிற்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என ஓவராக பேசிய ஷாகின் அப்ரிடிக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12வது லீக் போட்டி இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்டிக்கு முன்னர் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தி சமூக வலைதளத்தில் செல்ஃபி எடுத்து பதிவிடுவேன் என கூறியிருந்தார். அவரது இந்த ஓவர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா அப்ரிடியின் பந்துகளை பவுண்டரிக்கு விளாசினார். ஆனாலும், அப்ரிடியின் பாதி கனவு நிறைவேறும் விதமாக ரோகித் மற்றும் கோலியின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

x