இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் - நேரில் கண்டு ரசிக்கும் அமித் ஷா!


குடும்பத்துடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பெரும் பரபரப்புக்கிடையே நடந்து வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை இந்திய பந்து வீச்சாளர்கள் திணறடித்தனர். இதன் மூலம் அந்த அணி 191 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி வருகிறது. 22 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன் எடுத்து விளையாடி வருகிறது. இந்த போட்டியை இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது குடும்பத்துடன் நேரில் வந்து கண்டு ரசித்து வருகிறார். அமைச்சரின் குடும்பம் இந்தியாவின் ஆட்டத்தை உற்சாகத்துடன் கண்டு ரசித்ததோடு, கைகளை தட்டி வீரர்களுக்கு உற்சாகமளித்தனர்.

x