இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று உலகக் கோப்பை போட்டி... விழாக்கோலம் பூண்டது அகமதாபாத்!


இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள்

உலகக் கோப்பை தொடரின் மிக முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன் 12.30 மணிக்கு உலகக் கோப்பை தொடருக்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் சங்கர் மகாதேவன், சுக்விந்தர் சிங், அர்ஜித் சிங் ஆகியோர் கலந்துகொண்டு இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.

இந்த போட்டியைக் காண அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் என பல நட்சத்திரங்கள் அகமதாபாத்தில் குவிந்துள்ளனர். அதேநேரம் அகமதாபாத் மைதானத்தை சுற்றிலும் காலை முதலே ரசிகர்கள் போட்டியைக் காண குவிந்துள்ளனர். இதன் காரணமாக மைதானத்தை சுற்றிலும் போலீஸார், தேசிய பாதுகாப்பு படையினர், துணை ராணுவத்தினர் உள்பட மொத்தம் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் 7 முறை ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இம்முறையும் அந்த வெற்றியை தக்க வைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். பாகிஸ்தான் அணியும் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்த போட்டி பரபரப்புடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

x