இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் ரன் இயந்திரம் சுப்மன் கில்... ரசிகர்கள் மகிழ்ச்சி!


சுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டகாரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக அவரால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான உலக கோப்பை லீக் சுற்று போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தொடரின் மிக முக்கியமான ஆட்டமாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி வரும் சனிக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

சுப்மன் கில்

இந்த போட்டியிலும் சுப்மன் கில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், கில் இன்று அகமதாபாத் செல்கிறார். அங்கு அவர் இந்திய அணியுடன் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், அவர் பயிற்சியில் ஈடுபடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் பிசிசிஐ தரப்பில் வெளியாகவில்லை.

டெங்குவின் பாதிப்பில் இருந்து 70 சதவீதம் மீண்டு விட்டதாகவும், விரைவில் 100 சதவீதம் மீண்டு விடுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் கலந்துகொள்வார் என்று அணி நிர்வாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

x