உலகக் கோப்பை கிரிக்கெட்... இந்தியாவிற்கு 273 ரன் இலக்கு!


இந்தியா - ஆப்கானிஸ்தான் போட்டி

இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 273 ரன் இலக்காக நிர்ணயித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 9வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி 80 ரன்னும், அஸ்மதுல்லா ஓமர்சை 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்தியா வெற்றி பெற அந்த அணி 273 ரன் இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x