சர்ச்சை... பாகிஸ்தான் பெண் வர்ணனையாளர் நாடு கடத்தப்பட்டாரா?... உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பு


ஜைனப் அப்பாஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற பாகிஸ்தான் பெண் வர்ணனையாளர் ஜைனப் அப்பாஸ் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி

இந்தியாவில் 11வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்.5-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைத் தவிர கிரிக்கெட் நிபுணர்கள், ரசிகர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் போட்டிக்காக இந்தியா வந்துள்ளனர்.

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றியுடன் களமிறங்கியது. தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை அந்த வீழ்த்தியது. ஹைதராபாத்தில் இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் இன்று விளையாடுகிறது.

ஜைனப் அப்பாஸ்

இந்த நிலையில் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஜைனப் அப்பாஸ் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இந்தியாவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதாகவும் பாகிஸ்தான் செய்தி சேனல் சாமா செய்தி வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

ஜைனப் தற்போது துபாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜைனப் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது.

ஐசிசி

மேலும், "ஜைனப் அப்பாஸ் நாடு கடத்தப்படவில்லை, தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் திரும்பிச் சென்றுவிட்டார்" என்று ஐசிசி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். " ஜைனப் கடந்த வாரம் ஹைதராபாத் வந்தார். அங்கிருந்து இருந்து பெங்களூரு, சென்னை, அகமதாபாத் உள்ளிட்ட பாகிஸ்தான் விளையாட உள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. பாகிஸ்தானின் முதல் போட்டியின் போது அவர் மைதானத்தில் காணப்பட்டார்" என்று கூறியுள்ளார்.

ஜைனப் அப்பாஸ்

நீண்ட காலமாக கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சிகளை ஜைனப் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் கிரிக்கெட் வர்ணனையாளராக இருப்பதோடு மட்டுமல்லாமல், ஒப்பனை கலைஞராகவும் இருந்து வருகிறார். இவரது தந்தை நசீர் அப்பாஸ் கிரிக்கெட் வீரர் ஆவார். பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் ஜைனப்பிற்கு ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

x