இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டெங்கு பாதிப்பு தீவிரமானதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாட சென்னை வந்த சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெற உள்ள போட்டியில் சுப்மன் கில் விளையாட மாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்தது.
இப்படியான சூழ்நிலையில், சுப்மன் கில் உடலில் உள்ள ரத்த செல்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அவர் சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.