சென்னையில் இன்று நடைபெற்றுவரும் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்து விளையாடி வருகிறது.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இருமுறை சாம்பியனான இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
1983 மற்றும் 2011-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்குகிறது. அதேவேளையில் ஹாட்ரிக் உட்பட 5 முறை பட்டம் வென்று குவித்துள்ள ஆஸ்திரேலிய அணி வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் தலைமையில் களம் கண்டுள்ளது. இந்திய அணியானது ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்ற நிலையில் உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது
இந்திய அணி வீரர்கள் விவரம்: ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா
இதையும் வாசிக்கலாமே...
இந்தியாவுக்கு வெளியே உலகின் மிகப்பெரும் இந்து கோயில்; நியூ ஜெர்ஸியில் இன்று குடமுழுக்கு!
அடுத்தடுத்து அதிரவைத்த நிலநடுக்கம்... நிலைகுலைந்த ஆப்கானிஸ்தான்; 320 பேர் பலி!
ஓசூர் அருகே பட்டாசு கடை தீவிபத்து: உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு!
இஸ்ரேலில் இருந்து மீட்கவேண்டும்... 18 தமிழர்கள் கோரிக்கை; அமைச்சர் மஸ்தான் தகவல்!