ஆசிய விளையாட்டில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதேபோல, ஆப்கானிஸ்தான் அணி, தனது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அதன்படி இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்நிலையில் இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்து வீச்சை தேர்ந்தெடுத்துள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 112 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அனைத்து போட்டிகளையும் கணக்கில் கொண்டு இந்தியாவிற்கு தங்கம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!