பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு நெய்மர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகளவில் வீரர் நெய்மருக்கு அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இவர் இன்ஸ்டாவில் பிரபலமாக வலம் வந்த புரூனா பியான்கார்டி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இத்தம்பதிக்கு ஏற்கெனவே, 12 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் தந்தையாகியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நெய்மர் இன்ஸ்டாவில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது தங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
’’எங்கள் வாழ்க்கையை அர்த்தமாக்க வந்த மகளே வருக வருக; எங்களை பெற்றோராக தேர்ந்தெடுத்தற்கு நன்றி’’ என குழந்தை மற்றும் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நெய்மரின் பதிவிற்கு பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!