பதக்க வேட்டையில் செஞ்சுரி... ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா வரலாற்று சாதனை!


வில் வித்தை வீரர்

ஆசிய போட்டிகள் வில்வித்தை ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஓஜாஸ் தங்கம், அபிஷேக் வர்மா வெள்ளி பதக்கத்தையும் வென்ற நிலையில் பெண்கள் கபடி அணி சீனாவை வீழ்த்தி தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

வெற்றிக் களிப்பில் இந்திய வீரர்கள்.

சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய போட்டிகள் 14வது நாளாக போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்றைய நாளின் முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி மற்றும் 39 வெண்கலம் என்று மொத்தமாக 95 பதக்கங்களுடன் 4வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதலே இந்திய வீரர்கள் பதக்கங்களை வேட்டையாடி வருகின்றனர்.

மகளிருக்கான வில்வித்தை தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி ஸ்வாமி வெண்கலம் வென்று அசத்தினர். தொடர்ந்து வில்வித்தை காம்பவுண்ட் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி வென்னம் தென் கொரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து வில்வித்தையில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெற்றது.

அதில் இந்தியாவின் ஓஜாஸ் தங்கப் பதக்கத்தையும், அபிஷேக் வர்மா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். இதன் மூலமாக இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 99-ஐ எட்டி இருந்தது.

மகளிர் கபடி

மகளிர் கபடி பிரிவின் இறுதிப்போட்டியில் சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இந்தியா தங்கம் வென்று சாதித்துள்ளது. இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக 100வது பதக்கத்தை இந்தியா வென்று அசத்தியுள்ளது.

x