பதக்கம் வெல்வாரா அமன்? - ஒலிம்பிக் மல்யுத்தத்தில் அரையிறுதிக்கு முன்னேற்றம்!


பாரிஸ்: ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் செஹ்ராவத் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் அமன், வடக்கு மாசிடோனியா வீரர் விளாடிமிர் எகோரோவை எதிர்கொண்டார். இப்போட்டியில் 10-0 என்ற கணக்கில் விளாடிமிர் எகோராவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் அமன்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் ஜெலிம்கான் அபகரோவை, இந்திய வீரர் அமன் எதிர்கொண்டார். அதில் அமன் செஹ்ராவத் 12-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அரை இறுதியில் அமன் செஹ்ராவத் ஜப்பான் வீரர் ரீய் ஹிகுச்சியை எதிர்கொள்கிறார். இவர்கள் இருவருக்குமான ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 9.45 மணிக்கு நடைபெறுகிறது. அரையிறுதி ஆட்டத்திலும் அமன் வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார். இருப்பினும், அரையிறுதிக்கு தகுதி பெற்றதன் மூலமே அமன் செஹ்ராவத் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

x