வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இந்தப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். இன்று நடந்த வில்வித்தைப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேக்கா, அதிதி, பர்னீத் கவுர் ஆகியோர் கொண்ட இந்திய அணி, சீன தைப்பே அணிக்கு எதிராான போட்டியில் 230 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது.
இதுவரை இந்தியா 19 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என மொத்தம் 82 பதக்கங்களை வென்று 4வது இடத்தில் உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மனைவியின் டார்ச்சர்… விவாகரத்து பெற்றார் ஷிகர் தவான்!
HBD சோ : எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, ரஜினி... இறுதி வரை ‘கெத்து’ காட்டிய ஆளுமை!
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை!
அதிர்ச்சி… சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகள் தற்கொலை!
அதிகாலையில் அதிர்ச்சி... போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது!