உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கவுகாத்தி பர்சபரா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கன் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 46.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான குசால் மெண்டிஸ் 87 பந்துகளில் 9 சிக்சர் மற்றும் 14 பவுண்டரியுடன் 158 ரன்கள் குவித்தார். பின்னர் உடல் சோர்வு காரணமாக அவர் வெளியேறினார்.
பதுன் நிசாங்கா 30 ரன்னும், சமரவிக்ரமா 39 ரன்னும், தனஞ்செய டி சில்வா 22 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 295 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கன் அணி விளையாடத் தொடங்கியது.
அந்த அணியின் இப்ராகிம் சத்ரான் 7 ரன்னில் வெளியேற அடுத்து வந்த ரஹ்மத் ஷா, விக்கெட் கீப்பர் ரஹ்மானுல்லா குர்பாஸுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மழைகுறுக்கிட்டதன் காரணமாக வெற்றி இலக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 42 ஓவரில் 257 ரன்னாக மாற்றி அமைக்கப்பட்டது. இருவரும் 2 ஆவது விக்கெட்டிற்கு 215 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
குர்பாஸ் 119 ரன்னிலும், ரஹ்மத் ஷா 93 ரன்னிலும் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில்வெளியேறினர். அடுத்து வந்த நஜிபுல்லா சத்ரான் 15 ரன்னும், அஸ்மதுல்லா ஒமராசி 14 ரன்களும் எடுக்க 38.1 ஓவரில் ஆப்கன் அணி வெற்றி இலக்கை எட்டியது. முன்னதாக நடந்த பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணியிடமும் இலங்கை தோற்றது.
இதையும் வாசிக்கலாமே...
சிங்கிள் டீ குடிக்கிறதுல இவ்வளவு ஆபத்தா... உயிரை விலை பேசும் ஆய்வு முடிவுகள்!
அவர் என்ன மாமனா... மச்சானா... பிக் பாஸ் வீட்டில் தொடங்கிய முதல் சண்டை
அதிர்ச்சி வீடியாே... கணவருடன் கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை
சரிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்; இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!
இதுவரை 72 பதக்கங்கள்... ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா புதிய சாதனை!