கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் போட்டி `டை’யில் முடிவடைந்த நிலையில், 2-வது போட்டியில் இலங்கை வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு நகரில் நடைபெற்றது.
முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள்எடுத்தது. அவிஷ்க பெர்னாண்டோ 96, பதும் நிசங்கா 45, குசல் மெண்டிஸ் 59 ரன்கள் எடுத்தனர். ரியான் பராக் 3, சிராஜ், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 26.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரோஹித் சர்மா 35, விராட் கோலி 20, வாஷிங்டன் சுந்தர் 30, ரியான் பராக் 15 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். இதையடுத்து 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
27 ஆண்டுகளுக்குப் பின்னர்இந்தியாவுக்கு எதிரான ஒருநாள்தொடரை இலங்கை அணிக்குகைப்பற்றி சாதனை படைத்துள்ளது. கடைசியாக 1997-ம் ஆண்டு இலங்கை அணி, இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றி இருந்தது