ஆசிய விளையாட்டு போட்டி; வில்வித்தையில் தங்கம் வென்றது இந்தியா!


வில்வித்தையில் தங்கம் வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஆகியோர் கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளனர்.

வில்வித்தையில் தங்கம் வென்றது இந்தியா

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற வில்வித்தை கலப்பு இரட்டையர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.

ஜோதி சுரேகா வெண்ணாம், பிரவீன் ஓஜஸ் ஆகியோர் 159-158 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவை வீழ்த்தினர். இந்திய அணி 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவில் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை குவித்து 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x