இந்த உலகக் கோப்பையில் வெற்றி பெற்று விராட் கோலியை இந்திய வீரர்கள் தங்களது தோளில் சுமக்க வேண்டும் என வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.
2023-ம் ஆண்டிற்கான உலகக்கோப்பை தொடரானது எதிர்வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உலகக்கோப்பையை கைப்பற்ற மொத்தம் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. கடந்த 2011-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்றிய பின்னர் 12 ஆண்டுகள் கழித்து இந்திய அணிக்கு கோப்பையை கைப்பற்ற ஒரு அற்புதமான வாய்ப்பு இம்முறை கிடைத்துள்ளது.
ஏனெனில் இந்தியாவில் முழுக்க முழுக்க நடைபெற இருக்கும் இந்த தொடரில் இந்திய அணியே கோப்பையை கைப்பற்ற சாதகமான அணியாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் வெற்றி பெற்று விராட் கோலியை இந்திய வீரர்கள் தங்களது தோளில் சுமக்க வேண்டும் என வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய சேவாக், “2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி கேப்டனாக இருந்ததால் ஒரு சதம் கூட அடிக்கவில்லை. ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து இந்த தொடரில் அவர் பல சதங்களை அடிப்பார். மேலும் இந்த உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் விராட் கோலியை இந்திய வீரர்கள் தங்களது தோளில் சுமந்து மைதானத்தை சுற்றிவர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று சேவாக் கூறியுள்ளார்.
2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற பின்னர் சச்சினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் அவரை தோளில் சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். அதேபோன்று சச்சினுக்கு பிறகு இந்திய அணியை தாங்கி பிடித்து வரும் விராட் கோலிக்கு அதே மரியாதையை வீரர்கள் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே சேவாக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
கடவுளே என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்... நடிகை குஷ்பு நெகிழ்ச்சி!
அதிர்ச்சி... 4,000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!
டாஸ்மாக் கடையை மூடுங்க... திமுக எம்.எல்.ஏ காலில் விழுந்து கதறிய இளம்பெண்!
நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்கள் திடீர் சந்திப்பு!
நாங்க மட்டும் ஓட்டு போடலையா? திமுகவுக்கு எதிராக கொந்தளித்த பெண்கள்!