ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு முன்னேற்றம் - சாதிக்குமா இந்தியா?


பாரிஸ்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய அணி வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கத்துக்கான போட்டிக்கு இந்திய இணை தகுதி பெற்றுள்ளது. இந்தியாவின் மகேஸ்வரி சவுகான், ஆனந்த் ஜீத்சிங் ஆகியோர் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர். இன்று நடந்த போட்டியில் இந்த இணை 150க்கு 146 புள்ளிகள் பெற்றது.

வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் சீன இணையை, இந்திய இணை எதிர்கொள்கிறது. இன்று மாலை 6: 30 மணிக்கு வெண்கல பதக்கத்திற்கான இந்தப் போட்டி நடைபெற உள்ளது.

2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனா 21 தங்கம், 17 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் வென்று 50 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா 19 தங்கம், 27 வெள்ளி மற்றும் 26 வெண்கலம் வென்று 72 இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்திய அணி 3 வெண்கல பதக்கங்களை மட்டும் வென்று 57வது இடத்தில் உள்ளது.

x