'என் இதயம் முழுவதும் நீ தான் இருக்கிறாய்' - வைரலாகும் ஹர்திக் பாண்டியா வீடியோ


சென்னை: தனது மகன் அகஸ்தியாவின் பிறந்த நாளை இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், செர்பிய மாடல் அழகி நடாஷாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். குழந்தை பிறந்ததும் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஹர்திக் தனது மகனுக்கு அகஸ்தியா என்று பெயரிட்டார். தற்போது நடாஷாவும், ஹர்திக்கும் விவாகரத்து செய்துள்ளனர்.

இந்த நிலையில், அகஸ்தியா இன்றுடன் நான்கு வயதை எட்டியுள்ளார். இதற்கு அவரது தந்தையான ஹர்திக் பாண்டியா வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு சிறப்பு வீடியோவை ஹர்திக் பாண்டியா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இலங்கை பல்லேகலேயில் நடைபெறும் டி20 தொடருக்காக இலங்கையில் இந்திய அணியுடன் உள்ள ஹர்திக் பாண்டியா, தனது மகனுடன் இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதில், “ஒவ்வொரு நாளும் நீ என்னைத் தொடர வைக்கிறாய். உனக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என் இதயம் முழுக்க நீதான் இருக்கிறாய், என் அகு லவ் யூ. இந்த வாழ்த்து வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஹர்திக் பாண்டியா, தனது மகன் அகஸ்தியாவை கொஞ்சுவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

x