ரன் மழை: தொடர்ந்து 5 அரை சதம் விளாசி டிராவிட் ஹெட் புதிய சாதனை


அமெரிக்கா: ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து 5 அரை சதங்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். இந்தப் போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்காக விளையாடிய ஹெட் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 32 பந்துகளில் 54 ரன்களை எடுத்த டிராவிஸ் ஹெட், பின்னர் எம்ஐ நியூயோர்க்கிற்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் 54 ரன்களைப் பெற்றார். டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். அதேபோல சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸுக்கு எதிரான போட்டியிலும் 56 மற்றும் 77 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், தொடர்ந்து 5 இன்னிங்ஸ்களில் அரைசதம் அடித்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

டேவிட் வார்னர் ஐபிஎல் 2019-ல் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களை அடித்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய வார்னர், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் அரைசதம் அடித்தார். தற்போது அமெரிக்க டி20 லீக்கில், டிராவிஸ் ஹெட் டேவிட் வார்னரின் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்கள் விளாசிய சிறப்பு சாதனையை சமன் செய்துள்ளார். இதன் மூலம் இந்த சாதனையை படைத்த 2வது ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை இந்தியாவின் ரியான் பராக் படைத்துள்ளார். 2023-ம் ஆண்டு சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் அசாம் அணிக்காக விளையாடிய ரியான், தொடர்ந்து 7 அரைசதங்கள் அடித்து இந்த உலக சாதனையை படைத்தார்.

x