ஆசியக் கோப்பை: இலங்கை மகளிர் அணி சாம்பியன்


சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணி

தம்புல்லா: மகளிர் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இலங்கையின் தம்புல்லாவில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் மோதின.

இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 60 ரன்கள் எடுத்தார். பின்னர் விளையாடிய இலங்கை அணி, 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. இதையடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது.

x