துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் 580 புள்ளிகள் குவித்து 3-வது இடம் பிடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். 44 வீராங்கனைகள் கலந்து கொண்ட தகுதி சுற்றில் முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் இறுதி சுற்றில் நுழைந்துள்ளனர்.
ஹங்கேரியின் வெரோனிகா மேஜர் (582), கொரியாவின் ஜின் யி (582), வியட்நாமின் து வின் திரின்க் (578), கொரியாவின் யிஜி கிம் (578), சீனாவின் லி (577), துர்க்மேனிஸ்தானின் தர்ஹான் செவ்வல் இலைடா (577), சீனாவின் ஜியாங் ராங்சின் (577) ஆகியோரும் இறுதி சுற்றில் மனுபாகருடன் பதக்கம் வெல்ல மல்லுக்கட்ட உள்ளனர்.