33-வது ஒலிம்பிக் திருவிழா பாரிஸ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதைத் தொடர்ந்து நேற்று போட்டிகள் நடைபெற்றன. பாரிஸ் ஒலிம்பிக்கின் முதல் தங்கப் பதக்கத்தை சீனா தட்டிச் சென்றது. துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணிகள் பிரிவில் சீனாவின் யுடிங் ஹூவாங், லிஹாவோ ஷெங் ஜோடி தங்கப் பதக்கத்துக்கான போட்டியில் தென் கொரியாவின் ஜிஹியோன் கியூம், ஹஜுன் பார்க் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
இதில் சீனாவின் யுடிங் ஹூவாங், லிஹாவோ ஷெங் ஜோடி 16 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றது. தென் கொரியா ஜோடி 12 புள்ளிகளை சேர்த்த வெள்ளிப் பதக்கம் பெற்றது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கஜகஸ்தானின் அலெக்சாண்ட்ரா லீ, இஸ்லாம் சத்பாயேவ் ஜோடி ஜெர்மனியின் அனா ஜான்சென், மாக்சிமிலியன் அல்பிரிக் ஜோடியை சந்தித்தது. இதில் கஜகஸ்தான் ஜோடி 17-5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது.