மாநில ஹாக்கி போட்டி: சென்னை ஐஓபி அணி முதலிடம்


மதுரையில் ரிசர்வ்  லன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை ஐஓபி அணி முதலிடம் பெற்று கோப்பை வென்றது.

மதுரை: மதுரையில் ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் சனிக்கிழமை (ஜூலை 27) நடந்த மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை ஐஓபி அணி முதலிடம் பெற்று ராஜாமணி நினைவுக் கோப்பையை வென்றனர்.

மதுரையில் ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 28-வது ஆண்டு மாநில அளவிலான ஹாக்கி போட்டி எம்ஜிஆர் விளையாட்டு அரங்கில் ஜூலை 20 முதல் தொடங்கி ஜூலை 27 வரை நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 24 அணிகள் பங்கேற்றன.

இதன் அரையிறுதிப் போட்டியில் சென்னை ஏஜிஓஆர்சி அணியும், கோவில்பட்டி விளையாட்டு விடுதி அணியும் விளையாடின. 2-வது போட்டியில் சென்னை ஐஓபி அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் விளையாடின. இறுதிப்போட்டியில் சென்னை ஐஓபி அணி முதலிடம் பெற்று ராஜாமணி நினைவுக்கோப்பையை வென்றன.

சென்னை இந்தியன் வங்கி இரண்டாமிடம் பெற்று கனகமணி அம்மாள் நினைவுக்கோப்பையை வென்றனர். சென்னை ஏஜிஒஆர்சி மூன்றாமிடம், கோவில்பட்டி விளையாட்டு விடுதி அணி நான்காம் இடம் பெற்றன. இவர்களுக்கான ஏசியன் ஹாக்கி பெடரேஷன் டெவலப்மென்ட் கமிட்டி மெம்பர் சேகர் ஜெ.மனோகரன் கோப்பைகளை வழங்கினார்.

மேலும் சிறந்த கோல்கீப்பர் உபேந்திர சிங் தன்வீர், சிறந்த தடுப்பாட்டக்காரர் வி.வினோதன், சிறந்த இடைநிலை ஆட்டக்காரர் எம்.திலீபன், சிறந்த முன்கள வீரர் அஜய் யாதவ், சிறந்த இளநிலை ஆட்டக்காரர் ஸ்ரீதர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்பாடுகளை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் கண்ணன் தலைமையில் உறுப்பினர்கள் கென்னடி மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.

x