விவாகரத்து பெற்ற பின் நடிகர் அமீர்கான், கிரண் ராவை இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா, நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் விவாகரத்து என்பது பொதுவாகி விட்டது. ஆனால், பிரபலங்கள் வாழ்க்கையில் நடக்கும் விவாகரத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விடுகிறது. சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக், நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் விவாகரத்து பரபரப்பாக பேசப்பட்டது. இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், செர்பிய மாடல் அழகி நடாஷாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். குழந்தை பிறந்ததும் அவர்கள் திருமணம் செய்து கொண்டார். ஹர்திக் தனது மகனுக்கு அகஸ்தியா என்று பெயரிட்டார். தற்போது நடாஷாவும் ஹர்திக்கும் விவாகரத்து செய்துள்ளனர். இதன் பிறகு, நடாஷா செர்பியாவுக்குத் திரும்பியுள்ளார். அங்குள்ள பூங்கா ஒன்றில் நடாஷா தனது மகனுடன் நேரத்தை செலவிட்டார். அது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் நடாஷா பகிர்ந்துள்ளார்.
விவாகரத்து பெற்ற பிறகு முதன்முறையாக நடாஷாவின் பதிவிற்கு ஹர்திக் பாண்டியா பதில் அளித்துள்ளார். தனது மகனுடன் நடாஷா உள்ள புகைப்படத்திற்கு ஹார்ட் எமோஜியை ஹர்திக் பதிவிட்டுள்ளார். ஹர்திக் தன் மகன் மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஹர்திக் மற்றும் நடாஷா இருவரும் இணைந்து தங்கள் மகனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர். அதனால் அவர்கள் அடிக்கடி சந்திக்க வேண்டும். இந்த காரணத்திற்காக நடிகர் அமீர்கான், கிரண் ராவை அவர் பின்பற்றுகிறார் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் நடிகர் அமீர்கானும், கிரண் ராவும் விவாகரத்து பெற்றவர்கள். ஆனாலும் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இருவரும் இணைந்து திரைப்படம் எடுக்கிறார்கள். அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் ஸ்டைலை ஹர்திக், நடாஷா பின்பற்றுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.