பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுடன் விடைபெறுகிறேன் - டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே உருக்கமான பதிவு


பாரிஸ்: பாரிஸில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுடன் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரபல இங்கிலாந்து டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரே சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். இளம் வயதிலேயே டென்னிஸ் போட்டிகளில் அறிமுகமான அவர், குறுகிய காலத்திலேயே பிக் 4 என்றழைக்கப்படும் ரோஜர் பெடரர், ரபேல் நடால், நோவா ஜோகோவிச் ஆகிய ஜாம்பவான்களுடன் இணைந்தார். 2008 முதல் 2017ம் ஆண்டு வரை உலகின் முதல் நிலை வீரராக சர்வதேச டென்னிஸ் வீரர்களுக்கான தரவரிசையில் இடம்பெற்றார்.

இதுவரை 2 விம்பிள்டன் உட்பட 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 46 ஏடிபி டூர் பட்டங்கள் ஆகியவற்றை அவர் வென்றுள்ளார். இங்கிலாந்துக்காக 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தனிநபர் பிரிவில் தங்கம் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் ஆகியவற்றை வென்று அவர் சாதனை படைத்தார்.

2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றும் அவர் சாதனை படைத்தார். இந்த சூழலில் தற்போது பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் பிரிவில் அவர் பங்கேற்கிறார்.

x