உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மூன்றாவது இடத்திற்காக நடைபெறும் ஆட்டத்தில் குரோசியா மற்றும் மொரோக்கோ அணிகள் இன்று மோதுகின்றன.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.
இதற்கு முன்னதாக இன்று கலீபா மைதானத்தில் 3-வது இடத்துக்கான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் அரையிறுதி சுற்றுடன் வெளியேறிய குரோஷியா-மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கால்பந்து உலகக் கோப்பையில் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறிய ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த முதல் அணி என்ற பெருமையை மொராக்கோ பெற்றுள்ளது. தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள மொராக்கோ, இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் குரோஷியாவுடன் டிரா செய்தது. பெல்ஜியம், கனடா அணிகளை தோற்கடித்து 2-வது சுற்றில் நுழைந்த மொராக்கோ, அந்த சுற்றில் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது. ஆனால் அரைஇறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் மொராக்கோ தோற்றது.