போராடி வென்றது இங்கிலாந்து - சூப்பர் 12 சுற்றில் இலங்கைக்கு தோல்வி!


சிட்னியில் இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை இங்கிலாந்து போராடி வென்றது

டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இன்று இலங்கை அணியுடன் இங்கிலாந்து மோதியது. சிட்னி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனைத் தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிசாங்கா ஆரம்பம் முதலே அதிரடி காட்டி பந்து வீச்சாளர்களுக்கு பயம் காட்டினார். குஷான் மெண்டிஸ் 18 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. இதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு இலங்கை 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நிசாங்கா 45 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் சார்பில் மார்க் உட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

142 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர் மற்றும் ஹேலஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பட்லர் 28 ரன்னிலும், ஹேலஸ் 47 ரன்னிலும் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் பொறுப்பாக ஆடி அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதனால் 19.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 144 ரன்கள் எடுத்து வெறிபெற்றது. ஸ்டோக்ஸ் ஆட்டமிழக்காமல் 42 ரன்களுடன் களத்தில் இருந்தார். 142 ரன்கள் என்பது எளிதான இலக்காக இருந்தாலும், இலங்கை அணியின் பந்துவீச்சு சிறபாக இருந்ததால் இங்கிலாந்து அணி சற்று தடுமாறியது. இலங்கை அணி சார்பில் ஹசரங்கா, லஹிரு குமாரா மற்றும் தனஞ்ஜெயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

x